பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை *9 இலக்கண நூல்கள் கூறுவதிலிருந்து மதிப்புரைபெறும் வழக்கம் அக்காலத்தில் சர்வ சாதாரணமாக இருந் திருக்கவேண்டும். எனத்தெரிகிறது. மதிப்புரையை அக்காலத்தில் சிறப்புப்பாயிரம்' என்று வழங்கி வந்தனர். தவிரவும், மதிப்புரையை இன்னர்தான் அளிக்க வேண்டும் என்ற கியதியும் இருந்து வந்ததாகத் தெரி கிறது. தனக்குக் குருவாக விளங்கிய ஆசிரியனிட மிருந்தும், தன்ைேடு சேர்ந்து கற்ற தோழனிடமிருந் தும், தனது மானுக்கனிடமிருந்தும், தனது நூலுக்கு உரை செய்தவனிடமிருந்தும் பொதுவாக மதிப்புரை பெறலாம் என்று நன்னூல் என்ற இலக்கண நூல் கூறுகிறது. சங்க காலத்தில் வெளிவந்த நூல்கள் யாவும், சங்கத்துச் சான்ருேர்களால் பரிசீலனை செய்யப்பட்ட பிறகுதான் வெளிவருதல் வழக்கம். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் மூன்று சங்கங்கள் இருந்து வந்த தாகச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்ருேம். மூன்ருவது சங்கம் இப்போதுள்ள மதுரையில் இருந்த தாகக் கூறப்படுகிறது. நூல்களை ஏற்றுக்கொள்வதற் குச் சங்கத்தில் ஒரு பலகை இருந்தது. அது கன் மாப்பலகை என்ற பெயரால் வழங்கி வந்தது. நல்ல நூல்களாக இல்லாவிட்டால், பலகை அவற்றை ஏற்றுக் கொள்ளாதாம்; இடம் கொடாது கீழே தள்ளிவிடுமாம். மூன்ருவது சங்க நூல்களுள் சிறந்து விளங் கியது திருக்குறள்: அது திருவள்ளுவரால் செய்ய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/97&oldid=781787" இலிருந்து மீள்விக்கப்பட்டது