பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கவிஞன் உள்ள்ம் பட்டது. இப்போது பண்டைத் தமிழரின் நெஞ்சைப் பாங்குடன் எடுத்துக் காட்டுவதற்கு இதுவே சிறந்த இலக்கிய நாலாக இருந்து வருகிறது. . அது சங்கப் பரீட்சை யில் தேறிய நூலே என்பதற்குஅதற்கு மதிப் புரை கல்கியுள்ள சங்கத்துச் சான்ருேர்களது மதிப்புரை களே சான்ருகும். அவையாவும் திருவள்ளுவ மாலை எனத்தொகுக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறள் சங்கத்திற்கு வந்த நாளன்று. அக் காலத்திலிருந்த சங்கப் புலவர்கள் ஒவ்வொருவரும் மதிப்புரையாக ஒவ்வொரு வெண்பர தந்திருக்கின் றனர். ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாகவே புகழ்ந்திருக் கின்றனர்; ஒவ்வொருவரும் தாம் அறிந்தவாறே நூலேப் புகழ்ந்திருக்கின்றனர். இச்சங்கப் புலவர்களில் கபிலர் என்பவரும் ஒரு வர்; சிறந்த அறிஞர். குறிஞ்சித் திணையைப்பற்றிப் பாடல்கள் ஆக்குவதில் அதிக சமர்த்தர். திருக்குறள் சங்கத்திற்கு வரும் நாள் வருகிறது: இவர் அன்று அதிகாலையிலெழுந்து காலக்கடன் முடிக்கக் கானகம் செல்லுகிருர். எவ்விதமான மதிப் புரை தரலாம் என்பதைப் பற்றி அவர் மனம் சிந்தித்த வண்ணமிருக்கிறது. கருவேல் குச்சியால் பல்லேத் துலக்கிக்கொண்டே இ ைத ப் ப ற் றி யோசித்துக் கொண்டிருக்கிரு.ர். அது பின் பனிக்காலம். ஒரு வயல். நெல்லுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிருன் குடியானவன். நீர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/98&oldid=781788" இலிருந்து மீள்விக்கப்பட்டது