பேரெழில்தையல் ஒருத்தியின் மையலில் நையலுற்ற இளைஞன், அவள்பால் வைத்த அன்பினால் கிறக்கம் உற்று, என்னவெல்லாமோ பேசுகிறான்; பாடுகிறான்.
அப்பெண்ணின் பேரெழிலைப் பார்த்து, இவன் கவிஞனாகிவிட்டானாம்! அதன் பிறகு அவன் பாடாமலா இருப்பான்?
ஆடவா பெண்னே! ஆலைகடல் போலுலகில்
பாடவா பெண்னே! பசுங்குயிலே-கூடத்தான் ஊடல் விடுப்பாய்; உணர்வெழுப்பும இன்பத்தைத் தேடவா பெண்ணே தெரிந்து!...
காவியத்தில் கண்டேன் உன் கன்னல்தமிழ்! மொழியை
ஓவியத்தில் கண்டேன் நான் உன்னழகைத் தாவிவரும்
காவிரியில் உன் நடையைக் கண்டிட்டேன் -காரிகையே
ஆவியிற் கண்டேனுன் அன்பு!...
இறுதி வரியில்தான். கவிஞரின் சிறப்பும் காதலின் சிறப்பும் நிறக்கக் காண்கிறோம். இளம் பாரதிதாசன் என்று புகழப்படும் புதுவைக் கவிஞர் இவர். பெயர்:‘தமிழ்க்கோவலன்’
இதோ,இன்னொரு பிரிவுத் தலைவன்.
காதலர்கட்குத் தத்தம் காதலிகள் எப்படி எப்படியெல்லாம் காட்சி தந்து ‘தரிசனம்’
57