பக்கம்:கவிஞர் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக் காடர்

15




மதிப்பும் குறையக்கூடாது. இதற்கு என்ன வழி என்று யோசித்தார்கள். கடைசியில் ஒரு தந்திரம் செய்யத் தீர்மானித்தார்கள்.

அந்தக் காலத்தில் பனையோலையில்தான் எதையும் எழுதுவார்கள். எழுத்தாணியினால் ஏட்டில் வேகமாக எழுதி வந்தார்கள். நூல்களை எழுதி, அதற்காகக் கூலி வாங்கும் எழுத்தாளர்கள் இருந்தார்கள். மிகவும் கெட்டிக்காரர்களாகிய எழுத்தாளர்கள் சிலரைச் சங்கப் புலவர்கள் தேடிக் கண்டு பிடித்தார்கள். அவர்களுக்கு வேண்டிய கூலி கொடுப்பதாகச் சொன்னார்கள். அவர்களைக் கொண்டு, தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா?

யாராவது புலவர் வந்து, தாம் இயற்றிய கவியைச் சங்கத்தில் சொல்வார்கள். அங்கே திரைக்கு அப்பால் எழுத்தாளர்கள் பழைய வெற்றேடும் எழுத்தாணியுமாக உட்கார்ந்திருப்பார்கள். புலவர் சொல்லச் சொல்ல அந்தக் கவிகளை எட்டில் உடனுக்குடன் எழுதிவிடுவார்கள். புலவர் எல்லாவற்றையும் பாடி முடித்தவுடன் சங்கப் புலவர் ஒருவர், “இந்தப் பாட்டுகள் முன்பே யாரோ பாடியவை அல்லவா?” என்று கேட்பார்.

“இல்லையே! நான் பாடியவையே” என்று வந்த புலவர் சொல்வார்.

“இல்லை, இல்லை. எங்கள் சங்கத்தில் இந்தப் புத்தகம்


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/17&oldid=1525696" இலிருந்து மீள்விக்கப்பட்டது