பக்கம்:கவிஞர் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரிசில் கிழார்

23




யாக இருந்து, இந்த நாட்டை ஆளும்படி வேண்டிக்கொள்கிறேன்.”

ஒர் இனிய நாடகக் காட்சியைக் காண்பதுபோல இருந்தது மற்றவர்களுக்கு.

அரிசில்கிழார் வற்புறுத்தினார். அரசன் அவர் வார்த்தையை மறுக்க முடியவில்லை. “ஆனால் ஒரு வரம் அருள வேண்டும். அரசராக இருந்து ஆட்சி புரியாவிட்டாலும் அமைச்சராக இருந்து, எனக்குத் துணை புரியவேண்டும். அப்படி இருந்தால், தங்களுடைய அறிவுரையால் நான் திருந்தி, நல்ல செயல்களைச் செய்ய முடியும்” என்று அரசன் பணிந்து, கெஞ்சிக் கேட்டான்.

அதைப் புறக்கணிக்க அரிசில்கிழார் விரும்பவில்லை. அன்று முதல் அரிசில்கிழார் சேர அரசனுடைய அமைச்சராக இருந்து விளங்கினார். அரசனுக்கு அடங்கிய அமைச்சராக அல்ல: அரசனை அடக்கி அறிவுரை கூறும் நல்லமைச்சராக வாழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/25&oldid=1525729" இலிருந்து மீள்விக்கப்பட்டது