பக்கம்:கவிஞர் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவரசர் இளங்கோவடிகள்

சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம் பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர். அவனுக்குப் பின் ஒராசனத்தில் அவனுடைய குமரர் இருவரும் அமர்ந்திருந்தனர், மூத்தவன் செங்குட்டுவன். இளே யவன் பெயர் இளங்கோ என்று சொல்வார்கள். சின்ன ராஜா என்று அதற்கு அர்த்தம். மந்திரி களும் வேறு பெரியவர்களும் அரசனுடைய அவையில் இருக் தார்கள். . -

அப்போது ஜோசியம் சொல்கிறவன் ஒருவன் அங்கே வங் தான். அவனே கிமித்திகன் என்றும் சொல்வார்கள். அங்க அடை யாளங்களைக் கண்டே அவன் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிய செய்திகளேச் சொல்லும் ஆற்றல் படைத்திருந்தான். அரசனிடம் தன் திறமையைக் காட்டிப் பரிசு பெறலாம் என்ற விருப்பத்தோடு அவன் அரச சபைக்கு வந்திருந்தான்.

அவன் தன்னுடைய பிரதாபங்களே எல்லாம் சொல்லிக் கொண்டான். அந்த ஊருக்குப் போனேன். அந்த ராஜாவைக் கண்டேன். அவர் முகத்தைப் பார்த்தே ஜோசியம் சொன்னேன். இன்ன இன்ன பரிசுகளைப் பெற்றேன்” என்று விரிவாகச் சொன் ன்ை. சபையில் இருந்த அனைவருக்கும் தங்களைப்பற்றி ஜோசி யம் கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. அரசன் வீற்றிருக்கும்போது அவர்கள் எப்படிக் கேட்பது' . . . . ஜோசியன் சுற்று முற்றும் பார்த்தான். அரசகுமாரர்கள் இருவரும் வீற்றிருக்கும் ஆசனத்தில் அவன் பார்வை சென்றது. தேசு தவழும் முகத்தையுடைய இளைய குமாரருடைய திருமேனி யைக் கூர்ந்து கவனித்தான். அவரைப்பற்றி ஜோசியம் சொல் லத் தொடங்கின்ை. -

'அரசே இதோ வீற்றிருக்கிருரே, இவருடைய அங்க அடை யாளங்களைப் பார்த்தேன். இவர் ஒர் அரசுக்குத் தலைவராவார். அதற்கு ஏற்ற குறிகள் இவர் முகத்தே காணப்படுகின்றன’ என்று சொன்னன். - - - அதைக் கேட்டுச் சபையில் உள்ளவர்கள் திடுக்கிட்டார்கள். ‘இவன் இவ்வளவு தைரியமாகப் பேசுகிருனே! யாரிடம் எதைச் சொல்கிருேம் என்று யோசித்துப் பேச வேண்டாமோ!' என்று பெரியவர்கள் எண்ணினர்கன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/53&oldid=686154" இலிருந்து மீள்விக்கப்பட்டது