பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (3) சந்தனு : இவன் தண்ணிர் மங்கையிடம் கொண்ட விரக வேதனை: மோகனப் புனலில்-அவனை முழுக் காட்டினாள்; அதில் தன் முனை முறியா முனைப்பைமுழுக்கக் காட்டினாள்! 'ஆர் நீ? என வினவினாள்! அவன்- . வினாவிற்கு-அவள் விடையளிக்க விரும்பாது. வார்த்தைகளை-தன் வாய்க்குள் சிறைவைத்துஉதடுகள் என்னும் கதவுகளை-மெளனச் சாவியால் பூட்டினாள்; முறுவல் சின்னதாய்க் காட்டினாள்! தோளில்செந்தனு தாங்கும் சந்தனு. . பேசாமடந்தையே!-என்னை வருத்தும் விரகத்திற்குஉடந்தையே! நெஞ்சைச் சுடும்நெருப்பு வல்லியே! சேலை கட்டும்கறுப்பு வில்லியே!-ஆசை வேள்வியில்-இன்னும் வார்ப்பதேன் நெய்? நான்வெந்தது போதும்! எனைநீவிவாகம் செய்! நானொடு வெற்றுப் புள்ளி அல்ல; வேந்தன்! என் வேட்கைக்குமுற்றுப்புள்ளி வை! (1-பக்10-11)