பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 95 திருவாயைத் திறக்கும்-சற்று தூரச் சென்று! விஜயன் விரதத்திற்கு-ஒரு விக்கினம் வராதபடிவிலங்குகளெல்லாம்வால்சுருட்டி விலகிப் போயின; ஒய்யாரமாய் ஒசிந்தால்ஓசை எழும் என்றுஒதிய மரங்கள் ஒவியங்கள் ஆயின! அரவங்கள் கேட்குமெனஅரவங்கள் சருகுகளில் ஊராமல்சகதிகளில் ஊர்ந்தன; நதியும் நாணலும்நிசப்தமாகச் சேர்ந்தன! தண்ணிர் அருவிதொப்பென்று குதிக்காதுவரையின் சரிவில்வழுக்கியவாறு இறங்கியது; காச்சு மூச்சென்று கத்தும் புள்ளினம்மூச்சுப் பேச்சின்றிமவுனத்தில் பிறங்கியது! விஜயன் உதடுகள் வழிவெளிப்போந்த'சிவாய நம’ எனும்சப்தம் மட்டும்-ஒர் அடிநாதமாய்அடவியெலா மொலித்தது; அந்த சிவானந்த லஹரியில்சொக்கிச் சுருண்டு கிடந்த