பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சுந்தரவனம்-தெய்வ சந்நிதியாய் சொலித்தது! (I-பக்171-72) இங்கு வில்லிபாரதத்தில் அர்ச்சுனனின் தவநிலையை வருணிக்கும் பாடல்கள் படித்து அநுபவிக்கத் தக்கவை: ஊர்வசியின் காமஇச்சை வருணனையைப் படித்த சிலர் இது விறலி விடு தூது, கூளப்பன் நாயகன் காதல், போன்ற நூல்களில் காணப்படும் வருணனைபோல் விரசமாகக் காணப்படுகிறதாகக் குறை சொல்வர். இரசத்தைப் பற்றிய கொள்கைகளை அறிந்திருந்தால் இவர்கள் தம் கருத்தை மாற்றிக் கொள்வர். அல்லது 'பச்சையம் என்ற புதுக்கவிதைப் பற்றி அறிந்திருந்தாலும் போதும். இதனை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாகும். சி.பி.மணி என்பார் பச்சையம் என்ற ஒரு புதுக்கவிதை படைத்துள்ளார். இதனை இந்த ஆசிரியரின் நூல் ஒன்றில்’ விளக்கப் பெற்றுள்ளது. பாலுணர்ச்சியைப் பச்சையாக எழுதக்கூடாது என்று சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கு சி.பி.மணி கூறும் எதிர்ப்பு தான் பச்சையம் என்ற கவிதை, கவிதையின் முற்பகுதி; வாலை இளநீரை வாய்வழியால் வாரிப் பருகும் இவர்கள் இளமை கொடுக்கும் துணிவில் இடித்துக் களிக்கும் இவர்கள் வயது வழங்கிய வாய்ப்பில் அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள் இருவரைக் கட்டிலேற்ற ஊதி முழக்கி ஊர்கூட்டும் இவர்கள் இருளில் இரகசியமாய் வெட்கி மருவி மயங்கும் இவர்கள் 25 வில்லிபாரதம்-அர்ச்சுனனின் தவநிலை-செய் (3742) 26 இந்நூல்-இயல் 7 இல் இதனைக் காணலாம். 27 புதுக்கவிதை போக்கும் நோக்கும் (பாளி நிலையம், பிராட்வே, சென்னை-600 108)-பக் 430-35. இப்போது இந்நூல் இரண்டாவது பதிப்பாக வெளிவர உள்ளது.