பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 103 உலா வருகையில்... வழிநெடுக-சிறு வாடை வீசியது; வாடையில் நறு வாடை வீசியது! அவன்மூக்கு நுனியை முதலில் அதுமுத்தமிட்டது; பின்பு மூக்குக்குள்ளேயேமுகாம் இட்டது! 'எந்தப் பூவில்வாசம் செய்யும்வாசம் இது? என்று அறிய. வாசத்தையே-தனக்கு வழிகாட்டியாகஅழைத்துக்கொண்டுஅரசன் சென்றான்! சிறிது தூரம்சென்றபின்தான். வாடையில் வந்த-நறு வாடையை வீசியது-நூல் ஆடையில் நின்ற-பால் ஆடையென்று கண்டான்! அவள்பரதவர் குலத்துப் பாவை! -இந்தப் பூவில் -எந்தப் பூவிலும் இல்லாத வாசத்தை-தன் கேசத்தில்வைத்திருக்கும் பூவை!