பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வில் வித்தை! இவன்தான்-உன் மண்ணுக்கு இனிமிராசு, இவனதுநுவலற்கரிய நுழைபுலத்தை, நிறுக்க-இந்தத் தராதலத்தில் இல்லைதராசு! இவன் பெயர்தேவவிரதன் நற்குணம்யாவும ஒனறாயமேவும் வரதன்! இந்தா!-உனது மகனைப் பிடி! -திருப்பித் தந்துவிட்டேன்-வாக்குத் தந்தபடி என்றுதனயனை-அவன தந்தையிடம் தந்துவிட்டுமறைந்தாள் கங்கை, ஈசன்முடிமேலிருக்கும் தண்ணீர் மங்கை ! (1-பக்.29.31) தேசாந்தரம் சென்ற மகன் திரும்பி வரும்போது ஒரு தந்தை பெறும் மகிழ்ச்சியைப் போல தேவவிரதனைக் காணும்போது மகிழ்ச்சி அடைகின்றான் சந்தனு! 4. சத்தியவதி: சந்தனு பூசிக்கொள்ளப் போகும் சந்தனத்தை அறிமுகம் செய்யும் பாங்கு இது: ஒருநாள்யமுனைக் கரையில்-சந்தனு