பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi ஆசிரியர் அறிமுகப்படுத்திக் கவிஞர் வாலியின் ஆற்றலைப் புலப்படுத்துகிறார். - அடுத்துவரும் இயல் பாண்டவர் பூமியின் அணிநலன் களை ஆராய்கிறது. கவிஞர் வாலியின் உருவகிக்கும் ஆற்றலை ஆசிரியர் பின்வரும் எடுத்துக்காட்டுவழி விளக்குகிறார்: அழகுஅங்கமெல்லாம் அப்பிக் கிடக்கும் அளகபாரத்தில் ஐப்பசி மேகம் கப்பிக் கிடக்கும் விழி விளக்குகள் வெளிச்சத்தைத் துப்பிக் கிடக்கும் உதட்டுப் பூக்கள் உள்ளிருக்கும் கள்ளால் உப்பிக் கிடக்கும் இவ்வாறே கவிஞர் வாலியின் உவமிக்கும் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகள் பலவற்றின் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்துகிறார். காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிக்கலாம்: விதையிலிருந்து எழுகின்ற விருட்சம் போல்-அவன்கை கதையிலிருந்து எழுந்தது முற்றுப்புள்ளி வைத்த வாக்கியம் போல்முடிந்து போனாள்