பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X நொந்த நெஞ்சங்களும்-அந்த ஓரிடத்தில் ஒன்றிமொய்த்த துண்டு! இத்தகைய வருணனைகள் பலவற்றை வகைப்படுத்தி எடுத்துக்காட்டி இவற்றில் படிப்போர் மனம் ஈடுபட்டு மகிழ்வதை ஆசிரியர் சுட்டிக்காட்டிச் செல்லும் பாங்கு பாராட்டற்குரியது. காவிய மாந்தர்கள்-அறிமுகம் பற்றி அமைகிறது. சகுனியை அறிமுகம் செய்யும்போது அவன்மீது கவிஞர் வாலி கொண்ட சினமும் சேர்ந்தே வெளிப்படுகிறது என்பதை ஆசிரியர் பின்வரும் எடுத்துக்காட்டால் விளக்குகிறார். தீய வர்க்கத்தைமொத்தமாககுத்தகைக்கு எடுத்தவன் சுததமாகசத்தியத்தை விடுத்தவன் சகுனி, அவன் ஆணுருக் கொண்ட ஆயிரம் கூனி சூதாடுவதிலும்சூதை உள்வைத்துவாதாடுவதிலும் அவன்போல்ஆருக்கும் வராது-அத்துணை ஆகடவிகடம் இவ்வாறு ஐம்பத்தைந்து கதைமாந்தர்களையும்