பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 137 பாண்டுவின் வேண்டுகோளை ஏற்று. மாத்திரிக்கும்-அந்த மந்திரத்தை-குந்தி உபதேசித்தாள்; அவளும்-ஒர் அன்னையாக-உடன் உபகரித்தாள்! 'இந்தப் பெண்ணொரு மலடு' எனப் பேசுமோ உலகு?-என்று அஞ்சியிருந்த மாத்திரிஅச்சம் நீங்கினாள்; மூத்தாள் குந்தி-மானம் காத்தாள் என்று-அவள் மலரடியைத் தன்மனத்தில் தாங்கினாள்! இனியதோர்இளவேனிற் காலத்தில்... அஸ்வினி தேவர்களை-தன் அகத்தில் வைத்து ஆராதித்துஅழைத்தாள் மாத்திரி-ஒருநாள் அர்த்த ராத்திரி! அஸ்வினி தேவர்கள்அக்கணமே வந்தனர்; மாத்திரியை ஆரத் தழுவி-அவளுக்கு ஆளுக்கொரு மகவைத் தந்தனர்! இருவர் வழங்கிய-அந்த இருவர்தாம். நகுலன் ! சகாதேவன் ! (1-பக்:128-30)