பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi மக்கள் மனத்தில் காட்சியளிப்பது இடையனாகவே. ஆழ்வார் பெருமக்களும் இந்நோக்கில்தான் கண்ணனைப் பற்றி அதிகமாகப் பாடியுள்ளனர். பாரதக் கதையில் ஏனைய காவிய மாந்தர்கள் ஆற்றிய பங்கைவிட கண்ணன் ஆற்றிய பங்குதான் பன்மடங்கு அதிகமானது. கண்ணனைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள்தாம் இலக்கியங்களிலும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இதனால்தான் பாரதியாரும் கண்ணனைக் கதாநாயக னாகக் கொண்டு கண்ணன் பாட்டு என்ற நெஞ்சை நெகிழ வைக்கும் இலக்கியத்தைப் படைத்தருளினார். கண்ணன் இல்லையென்றால் 'பாரதமே இல்லை என்ற அளவுக்குக் கண்ணன் பெரும் புகழ் பெறுகின்றான். இராமன் கதை-இராம காதை இராமாயணம். பாண்டவர்-கெளரவர் கதை பாரதம், கண்ணனைப் பற்றி தனிக் கதை இல்லையாயினும் (பாகவத புராணத்தைத் தவிர) பாரதத்தை நினைக்கும்போது கண்ணனே நம் மனக்காட்சியில் தென்படுகின்றான். துரது போனவன் ஏற்றம் சொல்வது பாரதம்' என்ற ரீவசனயூஷண வாக்கும் எழுந்தது. செளலப்பியமே வடிவெடுத்தவன் தேவகிமைந்தன், நந்தகோபனின் வளர்ப்புப் பிள்ளை. பூமியைப் பற்றிய வழக்கு காரணமாக எழுந்த பாரதத்திற்கு வாலியார் 'பாண்டவர் பூமி என்ற பெயரிட்டு வழங்கினார். கெளரவர் தோற்று பூமி பாண்டவர் வசப்பட்டதால் பாண்டவர் பூமி என்ற பெயர் நன்கு பொருந்துவதாயிற்று. - வில்லியும் நல்லாப் பிள்ளையும் புலவர்கட்கு மட்டும் விருந்தாக இருந்தனர். நம் அருமை இராஜாஜி அவர்கள் மக்கள் மனத்திற்கு உகந்த உரைநடையில் வியாசர்