பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii விருந்து என்ற தலைப்பில் பொதுமக்கட்கு எட்டச் செய்தார்கள். இன்று நவீன இலக்கிய தளமாக அமைந்த புதுக் கவிதையில் பாண்டவர் பூமி'யைப் படைத்து பொதுமக்கள் விருந்தாக்கியுள்ளார் கவிஞர் வாலி. அகிலம் புகழும் ஆனந்தவிகடனில் வாரந்தோறும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் வெளிவந்த போதே இதன் நாடியை பொதுமக்கள் அறிந்து கொண்டார்கள். அத்தொடர்கள் ஒன்று திரண்டு நூல் வடிவத்தால் பொதுமக்கட்குக் கிட்டுகின்றது. இராமாயணத்தை விட பாரதம் பெரிய இதிகாசம். பன்னி யுரைக்கில் பாரதம்' என்ற ஆழ்வார் வாக்கும் இதனை உறுதிப்படுத்தும். ஆதலால் அக்கதை திருப்பதி பெரிய லட்டு போல் பொதுமக்கள் கைக்குக் கிடைத்துள்ளது. - சிறுவயது முதல் (பத்தாண்டுப் பருவம்) இன்றுவரை பொதுவாக இலக்கியங்களிலும் சிறப்பாக பக்தி இலக்கியங்களிலும் ஈடுபடச் செய்து வருகின்றான் எம்பெருமான் ஏழுமலையான். பாண்டவர் பூமியில் ஆழங்கால் பட்டு அநுபவித்த அநுபவமே இப்போது 'கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு என்ற மகுடத்தில் வெளிவருகின்றது. கோலார் தங்கவயலில் கிடைக்கும் தங்கத்திற்கு காரட்டு மாற்று அமைப்பது போல் கவிஞர் வாலியின் உள்ளத்திலிருந்து வெளிவந்த 'பாண்டவர் பூமிக்கு ஒரு மதிப்பீடு இது. பன்னிரண்டு நோக்குகளில் மிக்க கவனத்துடன் நோக்கப் பெற்றதன் விளைவு இது.இதன் எழுத்துப்படியை முற்றும் நோக்கி அச்சேறிய நிலையில் பார்வைப் படிமங்களையும் சரிபார்த்து உதவிய என்_அபிமான புத்திரி டாக்டர். M. B. சியாமளா எம்.ஏ.எம்.ஃபில், பிஎச்.டிக்கு அடியே னின் ஆசி கலந்த நன்றி.