பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு முடிவுற்றதும், இந்த மந்திர ஏணியை நோக்கி, "அயோத்திக்குப் போ என்றால் அஃது அயோத்திக்குப் போய்விடும். அங்குள்ள மகளிர் யாவரும் இதே சடங்கைச் செய்து "காசி நகர் செல்க' என்று பணிக்க வேண்டியது. இம்மாதிரி பன்னிரண்டு ஆண்டுக்காலம் துரியோதனன் ஏணியில் கட்டுப்பட்டு மகளிர்களால் தண்டனையை அநுபவித்தான் என்பது ஏணி ஏற்றத்தின் கதைச் சுருக்கம். இன்று விகடன், குமுதம், கல்கி போன்ற வெளியீடுகள் மக்கள் மனத்தைக் கவர்ந்து வருவன போல் அக்காலத்தில் அல்லி அரசாணிமாலை, பவளக் கொடி மாலை, பத்தினி நல்ல தங்காள் கதை’, ‘ஏணி ஏற்றம் போன்ற வெளியீடுகள் மக்கள் மனத்தைக் கவர்ந்து வந்தன. அவை மட்டமான தாளில் "பிழை மலிந்த சருக்கமாக வெளி வந்துள்ளன. அவற்றைத் தக்கவர்களைக் கொண்டு திருத்தம் செய்து நல்லதாளில் அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்டால் பழைய சரக்குகள் புதிய கோலத்துடன் உலவி இக்கால மக்கள் நடுவில் நல்ல செல்வாக்குடன் திகழும் என்பது அடியேனின் நம்பிக்கை. இந்த அறிமுகத்தில் எத்தனை விதமான பூக்கள்! எல்லாம் படிப்போரின் முகத்தை மலர்விக்கும் பூக்கள்! 40. சுபத்திரை இவளது அறிமுகமும் சுருக்கமாகவே அமைகின்றது. அந்தஆயிழை. தேவகிக்கும்-வசு தேவருக்கும்-தோன்றிய தென்றல்; இன்னும் அந்தத் தென்றலுக்கு ஆகவில்லை மன்றல்! (I-பக்35)