பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 187 'ஜரை என்பவளால்-ஒன்றாகச் சேர்க்கப்பட்ட பிள்ளைக்கு... 'ஜராசந்தன்' என்று-நாமம் சூட்டினான் அரசன், காசிப் புரவலன் பெற்ற-இரு புதல்விகளின் புருஷன்! இதுதான் இரு பாதி சதை சேர்ந்து பிள்ளையான ஜராசந்தன் கதை! (I-பக்:85.88) இந்த ஜராசந்தனின் புதல்வியர் இருவரையும் மணந்தவன் கம்சன். கம்சனைக் கண்ணன் கொன்றபின் மனைவியர் இருவரும் பூவையும் பொட்டையும் இழந்தனர். அதிலிருந்து ஜராசந்தனுக்கு கண்ணன்மீது கடுப்பு! 43. சிசுபாலன்: இவன் சேதி நாட்டு மன்னன் கண்ணனுக்கு அத்தைப் பிள்ளை. " இராசசூய யாகத்தில் அக்கிர பூசை வீடுமன் யோசனைப்படி கண்ணனுக்கு வழங்கப்பெற்றது. இதனை ஆட்சேபித்து இவன் குதித்தான். முக்கியமானவர்கள்மீது வசைபுராணம் பாடினான். கண்ணனையும் பலவாறு திட்டினான். மரியாதையைப் பெற. எவ்வகையில் இக்கண்ணஏற்றவன்? பதினெட்டுமுறைகள் ஜராசந்தனிடம் முண்டா தட்டித் தோற்றவன்! 16 இவன் பிறந்தபோது மூன்று கண்களும் நான்கு கைகளும் இருந்தன. இவற்றைக் கண்டு தாய் கலங்கினாள். அசரீரி எவனால் இவன் சாகப் போகின்றானோ அவன் மடியில் இக்குழந்தையை வைக்கில் இவனுக்குள்ள அதிகக் கண்ணும் அதிகக் கைகளும் மறையும் என்றது. அங்ங்னமே கண்ணன் மடியிலிருந்தபோது அக்குழந்தையின் கண்ணும் கைகளும் மறையக் கண்டு தாய் கண்ணனை நோக்கி என் மகன் செய்யும் நூறு குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும் என்ற வரம் பெற்றனள்.