பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பூக்கடை பெற்றெடுத்த சாக்கடை! துச்சர்க்கு துச்சன்; அவன்துச்சாதனன் துச்சன்; அவன்துஷ்கிருத்தியம் புரிவதில்துரியோதனனுக்கும் அச்சன். அயோக்கிய சிகாமணியானஅண்ணனையே நல்லவனாக்கும் அந்த அற்பப் பதர். (I-பக்145) இந்த அறிமுகத்தில் அமைந்துள்ள ஆறறிவுஅஞ்சறிவு-நஞ்சறிவு; மாடு-மாடு; பன்றி-பன்றி; நூல்நடை-கால்நடை, பூக்கடை-சாக் கடை என்ற சொல்லிணைகள் அற்புதமாக அமைந்து துரியன் தம்பி விரியனை விரிவாக ஒளிவிட்டுக் காட்டுகின்றன. இவ்விடத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலுள்ள இவனைப்பற்றிய அறிமுகத்தையும் நினைக்கச் செய்கிறது. இவ்வுரை கேட்டதுச் சாதனன்-அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன்-இவன் செவ்வி சிறிது புகலுவோம்;-இவன் தீமையில் அண்ணனை வென்றவன்; கல்வி எள்ளளவேனும் இல்லாதவன், கள்ளும் ஈரக்கறியும் விரும்புவோன்;-பிற தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்-தன்னைச் சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார் (264) புத்தி விவேகம் இல்லாதவன்;-புலி போல உடல்வலி கொண்டவன்;-கரை தத்தி வழியும் செருக்கினால்-கள்ளின் சார்பின்றியேவெறி சான்றவன்; அவ