பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு எழுந்தது-எளிதில் அணைக்கக் கூடியஅக்கினி! ஆதலால்-முதலில் அங்கி அணிந்த-இந்த அங்கியை அணை; அதன்பின்-இந்த அங்கிக்குள் இருக்கும் அங்கியை அனை! (I-பக். 92-94) இதில் அக்கினி, அங்கி என்ற சொற்கள் உருவகங் களாக நின்று வெவ்வேறு பொருள்களை உணர்த்துதலைக் கண்டு களிக்கலாம். ஆயர்குலத்து அரசன் சூரனுடைய மகள் பிருதை; வனப்பு மிக்கவள்இவளே குந்தி). இவளைப்பற்றி வாலியார் கூறுவது: அவள் அமாவாசை இல்லாத வெண்கதிர்; அத்தமனம் இல்லாத செங்கதிர்; ஓர் ஆடவன் வந்து அறுவடை செய்யாது மண்கதிர்போல்-பருவம் முதிர்ந்து நிற்கும்-ஒரு பெண்கதிர்! அத்தகு அரசிளங்குமரியின்... நடைக்கு உவமை நதி, சடைககு உவமை சாரை;