பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு மண்டிக் கிடக்கும் குப்பை நினைவுகளை குக்குடம் போல் கிளறினான்! (I-பக். 202) எப்பொழுதோ நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கவிஞர் 'குப்பை நினைவுகள் எனக் கருதுகின்றார். அவை இருக்கும் இடம் மன வீட்டின் புழைக்கடை, குப்பை என்ற சொல் கோழியை நினைவுகூரச்செய்து, குக்குடம் போல் கிளறினாள்' என்ற உவமையை அமைத்துப் பேசக் செய்கின்றது. கவிஞர் வாலி ஒருவரால்தான் இப்படிக் கூறமுடியும். அக்காலத்தில் இருந்த துருவதன்-துரோணர் நட்பைக் கூறுவார் இன்னோர் உவமையை அமைத்து. 'அரசன் மகன்! அந்தணன் மகன்! எனும் பேதங்களால் பேதலிக்காமல் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாற்போல் ஒருவர்க்குள் ஒருவர் உள்ளோடி உறைந்ததும்... (l-பக். 203) என்று கூறுவார். கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஒருவர் உள்ளத்தில் மற்றவரும் மற்றவர் உள்ளத்தில் முன்னவரும் மாறிப் புகுதல். வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும், இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார். என்று கம்பன் கூறுவானே அதுபோல் என்று கருதலாம். ஆதவனாகிய அச்சனைக் கர்ணனாகிய எச்சன் கனவில் கண்டு பேசுவதாக அமைந்த கவிதைப் பகுதியில் வருவது: தீயின் தாயே!