பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்திரன்- ● *,酸 அந்தணன் வேஷம் போட்டு இவனிடம் யாசித்தான்; அதுபோல் இவனும் அந்தணன் வேஷம் போட்டு-ஒர் ஆசானிடம் வாசித்தான்! (I-பக். 234) இந்திரனின் பார்ப்பன கோலம் கர்ணனின் பார்ப்பன கோலத்துக்கு உவமை என்பது வெளிப்படை கதைகளில் ஒருவரை ஏமாற்றம் செய்ய பார்ப்பன கோலமே மேற் கொள்ளப்பெறுகின்றது. காரணம் என்ன? ஒரு செட்டியார் போல், ஒரு வேலையாள் போல் வரக் கூடாதா? அவை பொருந்தா. பார்ப்பனனுக்கு இருக்கும் பணிவு, நளினம், பாசாங்கு பிறருக்குத் தவம் கிடந்தாலும் வாரா. ஏகலைவன் என்ற வேடச் சிறுவனைக் குறிப்பிடும் போது, அவன்யாக்கை கருமை கண்டால்காக்கை கருவம் விடும்; அவன் யாக்கை வலிமை கண்டால் தேக்கை தோல்வி தொடும்! (I-பக். 240) ஈண்டு யாக்கை கருமை யாக்கை வலிமை என்பவற்றில் உவம உருபுகள் இல்லை. இவை உவமைத் தொகைகளாகச் செயற்பட்டு அருமையாகப் பொருளு ணர்த்துவதைக் காணலாம். துருபதனை வென்று பார்த்தன் அவனைக் கட்டிக் கொண்டு வந்து துரோணரின் கையில் கொடுத்ததை வாலியார் கூறுவது: சிலையெடுத்தான்; சரம்போல் சரம் தொடுத்தான்; துருபதனை