பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 231 வலையெடுத்த வாளை போல்வாரிச் சுருட்டி வந்து. துரோணாச்சாரியரின்திருக்கரத்தில் கொடுத்தான்! (I-பக். 246) வாளை மீனை வலைஞன் வாரிச் சுருட்டிக் கொண்டு வருவதுபோல், துருபதனை வென்று சிறைப்படுத்திக் கொண்டு வந்துவிட்டான் விஜயன், 'சரம்போல் சரம் தொடுத்தது', 'வாளை போல் வாரிச் சுருட்டுதல்’ என்பவற்றிலுள்ள உவமைகள் அற்புதம்! திரெளபதி சுயம்வரம் மண்டபத்திற்கு வந்த நிலையும் அப்போது ஆசை நெஞ்சங்களின் மனத்தில் எழுந்த உணர்ச்சிகளையும்பற்றிக் கவிஞர் வாலி கழறுவது: திருச்சபைக்குள் நுழைந்தது திரெளபதி என்னும்மனோரஞ்சிதunsufi! அங்கிருந்தஆசை நெஞ்சங்கள். பாஞ்சால மன்னனைபோற்றிக் கொண்டிருந்தன-ஒரு மழைவில்லைமகளாகப் பெற்றதற்காக; அதே ஆசை நெஞ்சங்கள். துருபதனை துற்றிக் கொண்டிருந்தன-அம் மழைவில்லைப் பெற-விலையாயொரு மகாவில்லை வைத்ததற்காக! (1-பக். 347-48)