பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இங்கு திரெளபதியை மழைவில் என்ற உருவகம் குறிப்பிடுகின்றது. மழைவில்லை மகளாகப் பெற்றதற்காக மகிழ்வோரும் அவளைப் பெறுவதற்கு மகாவில்லைத் தடையாக வைத்தற்காகத் துாற்றுவோருமாக இருவகை யினர்க் கூட்டங்கள் அங்கிருந்தன. இதனை நோக்கும்போது சீதையைப் பெறுவதற்குக் கன்யா சுல்கமாக வைக்கப்பெற்ற வில்லைப் பற்றி மக்கள் பேசுவதை நினைவுகூர்கின்றோம். வாலியார் அமைக்கும் சில உவமைகள் தனித்தன்மை வாய்ந்தவை. விசுவகர்மாவின் கலைத்திறமையைக் கூறும் முகத்தான் வாலியார்: விதையிலிருந்து எழுகின்றவிருட்சம் போல்-அவன்கை கதையிலிருந்து எழுந்தன. கந்தரமான மாடங்கள்; சோபிதமான கூடங்கள்; மூவாயிரம் கால்கள்முளைந்த மகால்கள்! (I-பக், 13) ஆலமர் வித்திலிருந்து ஒரு சிறிய செடிக்கரு வெளிவந்து விருட்சமாவதை நினைந்து பார்க்கின்றோம். அவ்வளவு ஏன்? அடையாறு ஆலமரத்தைத்தான் கவனிப்போமே. வித்திலுள்ள அருங்குறளான சிறு செடி மரமாக, கிளைகளாக, சிறு சிறு கிளைகளாக, பூவாக, பிஞ்சாக, காயாக, பழமாக வளர்ந்து விரிவதைக் காண்கின்றோம். இவற்றை மனத்தில் கொண்டு விசுவகர்மாவின் படைப்பைக் காண்போம். அவன் கையிலிருந்த சுதையில் முகிழ்த்து எழுந்தவை சுந்தரமான மாடமாளிகைகள். சிதம்பரத்தில் பார்த்திருக்கின்றோம் ஆயிரங்கால் மண்டபங்களை. மதுரையில் பார்த்திருக்கின்றோம் திருமலை நாயக்கர் மகாலை. இங்கு மூவாயிரம் கால்கள் கொண்ட பல மகால்கள். நினைப்பிற்கும் எட்டாதவை