பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் * 233 இவை. வாலியார் கூறுவார்: "இவன் கந்தையையும் காசிப் பட்டாக் கும் வித்தையையும் சொத்தையையும் சீத்தாப்பழமாக்கும் வித்தையையும் கற்றவன்” என்று. உலூபியின் அழகை வருணிக்கும் பாங்கில் வாலியார் கறுவது: அவள்பாதம் முளைத்த-பாளி ஜாதம்; பணிவிழிகள் சீதம் விளைக்கும்-தனுர் மாதம்! இரண்டு புஜம்இடம் வலம்-இருக்க வரும் ஏமாம் புஜம்; வஸ்திரம்உடுத்திவரும்-மன்மதனின் அஸ்திரம்! நூபுரம் ஒலிக்கவரும்-மணி கோபுரம்; ராக்கொடி சொலிக்கவரும்சிறு பூங்கொடி (11-பக். 26) உவமைகள் உறைந்து வருவதாகச் சொல்லப்படுவதை மேலே சுட்டினோம். உலூபியின் அழகை உருவகங்கள் மயமாக அமைத்துள்ளார் கவிஞர் வாலி. உலூபியை பாதம் முளைத்த பாரி ஜாதம் எனக் குறிப்பிடுகின்றார். அவள் பாரி ஜாதமாக-தாமரையாக-உருவகப்படுத்தப் பெறுகின்றாள். குளிர்ச்சியான கண்கள்-பணிவிழிகள்மார்கழி மாதமாக உருவகிக்கப்பெறுகின்றன. அவளது இரண்டு புஜங்களும் ஏமாம்புஜமாக உருவகம் ஆகின்றன.