பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அவளை ஆடை உடுத்தி வரும் மன்மதனின் அஸ்திர மாக-மலர்க்கணையாக-உருவகிக்கின்றார். மற்றும் அவள் நூபுரம் ஒலிக்க வரும் கோபுரமாகவும், ராக்கொடி ஒலிக்க வரும் 'பூங்கொடியாகவும் உருவகம் ஆகின்றாள். மொத்தத்தில் அவள் உருவகங்களாகவே காட்சி தரு கின்றாள். சத்தியவதியின் இளையமகனும் காசநோய்ால் இறந்து போனான். இவள் நிலையைக் கவிஞர் வாலி, முற்றுப்புள்ளி வைத்த வாக்கியம் போல்முடிந்து போனாள் (1-பக். 60) அற்புதமான புது உவமை. இனி சத்தியவதியின் வமிசத்துக்கு வாரிசு இல்லை என்பது குறிப்பு. இதனை புதுக்கவிதையில் புதிய முறையில் அமைந்த உவமை மூலம் விளக்குவதில் பாவேந்தரையும் விஞ்சிவிடுகின்றார். மாண்டவ்யர் வாசம் செய்துவந்த முல்லை நிலத்தை வருணிக்கும் போக்கில் அங்கு ஒடிக் கொண்டிருக்கும் நதியைக் குறிப்பிடுவார். . அந்த முல்லை நிலத்தின் மார்பின் மேல் யாரோ பிரம்மோபதேசம் செய்துபோட்டுவிட்ட யக்ஞோபவிதம்போல்... நெளிசலும் வளைசலுமாய் நதியொன்று ஒடும் (I-பக். 71)