பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் : 235 ஏதாவது சடங்கு செய்யும் போதும், திதி கொடுக்கும் போதும் அல்லது பிரம்மோபதேசம் செய்யும்போது தருப்பையால் வேயப்பெற்ற பூணுால் ஒன்றைத் தரித்துக் கொள்வது மரபு. சடங்கு முடிந்ததும் அதனைக் களைந் தெறிவது வழக்கம். அவ்வாறு எறியப்பட்ட தருப்பைப் பூணுரல் போல் முல்லை நிலத்தில் ஒடிக் கொண்டிருந்தது சிறுநதி, தருப்பையால் வனையப்பெற்ற பூணுரலில் செய் நேர்த்தி இராது; கரடுமுரடாக இருக்கும். முல்லை நிலத்தில் ஒடும் ஒடை'யும் கரடுமுரடு போல் இருக்கும்; மருத நிலத்தில் ஒடும் ஜீவநதிபோல் இராது. அதன் களையை இந்த ஒடையில் காணமுடியாது. இந்த எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் வாலியாரின் உவமையின் நேர்த்தியை ஒர்ந்து மகிழ வேண்டும். 'சுள்ளென்று உறைக்கும்-சூரியனார் சித்தால் குந்தி கருவுற்றாள்; மீண்டும் கன்னி உருவுற்றாள். இதனை விளக்கும் வாலியார்: உலக வழக்கில்-குந்தி ஒருத்தியிடம்தான். கெடுத்த பிறகும்-கற்பு கெடாமலே இருந்தது-ஒரு கலவியாலே; எடுத்துக் கொடுத்த பிறகும்-சற்றும் குறையாமலே இருந்திடும்கல்வி போலே! (1-பக், 96) கொடுத்த பிறகும் குறைந்திடாத கல்வி போலே கலவியால் கெடுத்த பிறகும் குந்தியிடம் கற்பு கெடாமல் இருந்தது என்று கவிஞர் கூறும் உவமையின் சொல் நயம் பொருள் நயம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது சில உவமைகள்: விரிவஞ்சி விளக்காமல் வாலியார் படைத்த சில உவமைகளைக் காட்டுவேன்.