பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிநலன்கள் * 239 மகிழ்ச்சியுற்றனர். ஆனால் சகுனி போட்ட தூபத்தால் துரியோதனன் தந்தையை எதிர்த்துப் பேசுகின்றான் கண்ணிலான் திருவுள்ளம் தெரிந்து. தன் தவற்றினை உணர்கின்றான். உடனே தம்பியின் தனயர்களிடம் கொண்டிருந்த சமநோக்கு சரிகின்றது. திருதராட்டிரனின் இந்த மனநிலையை வாலியார் வாக்கில்: (6) தன் கைகளாலேயே தருமனின் கண்களில்... வெண்ணெயை வைத்தவன்-அந்த வெண்ணெயை வழித்துவிட்டு-ஆங்கு சுண்ணத்தை வைப்பதுபற்றி-மூளை சூடுபறக்கச் சிந்தித்தான். (1-258) மக்கள் அன்றாடவாக்கில் இடம்பெறும் வெண் ணெய்-சுண்ணம் உவமைகள் இங்கு இடம்பெற்றுத் திகழ்கின்றன. பாஞ்சாலியைப் பணயப் பொருளாய்த் தருமன் வைக்கக் குறித்ததனைக் கவிஞர் வாலியார் வருணிப்பது: (7) கந்தை நடுவே-பட்டுக் கலையை வைப்பது போல், கள் மொந்தை நடுவே-பசு மோரை வைப்பதுபோல்; பிரேதங்கள் நடுவே-பிறந்த பிள்ளையை வைப்பது போல்-வாடகை திரேகங்கள் நடுவே-ஜனகன் தனையையை வைப்பது போல, கழிப்பறை நடுவே-மணக்கும் கஸ்தூரியை வைப்பதுபோல்; (I- 140)