பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<> 2 4. 1 அணிநலன்கள் ஊர் எல்லையில் உள்ள-ஒரு தடாகத்துத் தாமரைக்குதலை சுற்றியது; 'கங்குல் வருகிறது என்றுகுவிவதா?-இல்லை, வெய்யில் வருகிறது என்றுவிரிவதா? முடிச்சவிழ்க்கமுடியாத வினாவொன்று-அந்த முண்டத்தின் முண்டாவில் தொற்றியது! இந்தக் குழப்பத்திற்கெல்லாம்காரணம்... கண்ணன் வண்ணமும்-அவன் அண்ணன் வண்ணமும்தான்! அண்ணன் பலராமன்ஆயிரம் அம்புலிகளின்திரட்டு; அவனதுஇளவல் பரந்தாமன் எழுந்து நடக்கின்ற இருட்டு! இந்த இருட்டுதான்... உலகு முழுவதற்கும்-ஒளியை உமிழ்கிறது; இல்லையேல் உலகுக்கேது பச்சை!-இந்த இரவியின் வெளிச்சமும்-இந்த இருட்டு இட்ட பிச்சை! (I–156–58)