பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இங்கு பகல், இரவு, ஆயிரம் அம்புலிகளின் திரட்டு: எழுந்து நடக்கின்ற இருட்டு, பச்சை, பிச்சை என்ற உருவகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. இப்பகுதி வாலியாரின் கண்ணன் பக்தியைக் காட்டுவதுடன், ஒரு தடாகத்தின் தாமரை வாலியாரின் கற்பனைச் சிறகையும் தமுக்கடித்துக் காட்டுகின்றது. தருமபுத்திரன் பிறப்பைப் பற்றி வாலியார் கூறுவது: குந்தியின் வழியே-அவள் உந்தியின் வழியேபுறம் வந்த அறம், இராவும் பகலும்-பாவங்களை அராவும் - அரம்! (I-122) இதில் அறம் அரம் என்ற இரண்டு உருவகங்கள் வெவ்வேறு பொருளை உணர்த்தி நிற்பதைக் கண்டு மகிழலாம். பழைய காதலனாலும் இல்லறம் துறந்த நம்பி வீடுமனாலும் மறுக்கப்பெற்ற அம்பை ஆறு ஆண்டுகள் அங்கும் இங்கும் அல்லாடி பன்னிரண்டு ஆண்டுகள் சொர்ணமலைச் சாரலில் முருகனை நோக்கித் தவம் இயற்றினாள். முருகன் அம்பைக்குக் காட்சி தந்ததைக் கவிஞர் வாலியார் கூறுவார்: அம்பையின் முன் அழகொளிரத் தோன்றியது. ஏத்துவர் எவாககும ஏறுமுகம் காட்டும் ஆறுமுகம்! -