பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு சொல்நயத்தால் களிப்பினை அவருக்கு உணர்த்தினாரா என்பது ஐயத்திற்குரியது. தொனி என்பது கூறுவோர் கேட்போரிடையே கொண்டுள்ள மனப்பான்மையே (Attifude) orgàrugi ரிச்சர்ட்ஸின் கருத்து. பேசுவோர் கேட்போருக் கேற்பத் தம் பேச்சின் சொல் வளத்தை (Diction) மாற்றியமைத்துக் கொள்வதுடன், கேட்போரிடம் தாம் கொண்டுள்ள மனப்பான்மைக் கேற்பவும் அதனை மாற்றி அமைத்துக் கொள்கின்றார். கேட்போரிடம் தாம் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் மேற்கொள்ளும் தொனி வல்லந்தமாகச் சண்டைக் கிழுக்கும்போது கையாளும் தொனியினின்றும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இன்று நாம் காணும் கேட்கும் அரசியல் பேச்சு எழுத்துக் களில் இங்கனம் மாறுபட்ட தொனிகளைக் காணலாம். உள்நோக்கம் என்பதை தொனியினின்று வேறு பிரித்து அறிய முடியாது. வஞ்சப் புகழ்ச்சியை (Irony) உள்நோக்கத்திற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சொல்லுவோர் ஒன்றைக் கூறுகின்றார்; அஃது எதிரான பொருளைத் தருகின்றது. கேட்போரைத் தம் சொல்வழிப் பொருளை (Literal meaning) அப்படியே முற்றிலும் எதிரான பொருளாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்பது கூறுவோரின் உள்நோக்கமாகும். எனவே, நாம் ஒரு சொல்லின் பொருள் அஃது உணர்த்தும் கருத்தென்றும், அதுவே ஏனைய மூன்றிற்கும் அடிப்படையாக அமைகின்றது என்றும் அறிகின்றோம். சாதாரணமாக நாம் பேசுங்கால், கருத்து மட்டிலும் உணர்த்தப்பெறுகின்றது; அதில் உணர்ச்சியைப் புலப்படுத்துவது அரிது. ஏனைய இரண்டு கூறுகளைப் புலப்படுத்துவது மேலும் அரிது. எனவே, ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டுமாயின், அது சுட்டும் எல்லை