பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 255 முழுவதையும் அறிதல் வேண்டும். சொல்லால் ஆக்கப் பெறுவது கவிதையாதலின் கவிதையை அநுபவிக்க வேண்டுமாயின் அதிலுள்ள சொற்களின் பல்வேறு பொருள்களை இடம் நோக்கி அறிதல் இன்றியமையாதது. சொற்களைக் கொண்டே கவிஞன் தன் கற்பனைத் திறனால் கவிதைகளைப் படைக்கின்றான். இக்கருத்தை நன்னூலாரும் பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூல்முடியு மாறு. ’ (பனுவல் - கவிதை) என்று கூறியுள்ளமையைக் காணலாம். உரைநடையில் கையாளப்பெறும் சொற்களுக்கும் கவிதையில் கையாளப் பெறும் சொற்களுக்கும் வேற்றுமை இல்லை. கவிஞன் அந்தச் சொற்களைக் கையாளும் முறையால்தான் அந்த வேற்றுமை உள்ளது. கவிதைகளில் சொற்கள் அமையும் பொழுது இடத்திற்கேற்றவாறும், சந்தர்ப்பத்திற்கேற்ற வாறும், உணர்ச்சிக்கேற்றவாறும், சுவைக்கேற்றவாறும் அமைந்து கவிதையைப் பொலிவுடையதாக்குகின்றன. இச்சொற்களைக் கையாளுதல் கவிஞனின் திறனைப் பொறுத்தது; அவனது மேதைத்தன்மையையும் பொறுத்தது. மகாவித்துவான் திரிசிபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் கவிதை இயற்றும் திறனைக் குறித்து, எனைவைத்தி எனை வைத்தி யெனப்பதங்கள் இடைஇடைநின்று இரந்து வேண்ட இனிவைப்பாம் இனிவைப்பம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்று கூறி 2 நன்னூல்-நூற்பா 24