பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நினைவுற்ற ஒருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து நிமலர் பூணப் புனைவுற்ற மீனாட்சி சுந்தரவள் ளலைப்போலப் புவியில் யாரே. என்று இராமசாமி அய்யர் என்ற பிள்ளையவர்களின் நண்பர் பாடியுள்ளது ஈண்டு சிந்திக்கற்பாலது. சொற்கள் அகராதியினின்றும் புறப்பட்டு வந்து தேன் கூட்டில் ஈக்கள் பல வரிசைகளாக நிற்பதைப் போல் ஏவல் கேட்டு நிற்கும். ஆனால் கவிஞர் வாலியிடம் சொற்கள் அவரைக் கேட்காமலேயே கவிதையின் அடிகளில் அமைந்து கவிதையைப் பொலிவுடையதாக்குகின்றன. இந்நிலையில் அவரது 'பாண்டவர் பூமியில் சொற்கள் அமைந்து கிடக்கும் நேர்த்தியைச் சில தலைப்புகளில் கண்டு மகிழ்வோம். 1. சொல்வீச்சுகள்: வாலியாரின் புதுக்கவிதையில் கல்விச்சை நிகர்த்த, வாள்வீச்சையொத்த சொல்வீச்சு ஒரு சிறப்பான அம்சம். பாண்டவர் பூமியில் இவை தொட்ட இடங்களிலெல்லாம் தட்டுப்படுவதைக் காணலாம்; தடுக்கி விழும் இடங்கள் தோறும் இவை அமைந்து ஒவ்வொன்றும் ஒருபடித் தேனாக இனிப்பதையும் கண்டு மகிழலாம். நூலின் தொடக்கத்திலேயே சொல்வீச்சைக் காட்டு வதற்குப் பிள்ளையார் சுழி இடுகின்றார். ಆಣ್ಣುಭಕ್ತಿ காத்து வந்த முத்தமிழை-அந்தப் பூவரசு சுற்றி வந்து பெற்றவன் நான்; 3 சாமிநாதய்யர் உ.வே.சா. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் இரண்டாம் பாகம் - பக் 255