பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 257 யாப்புக் கரணம் போட்டு யாக்கும் வித்தையை-அங்கு தோப்புக் கரணம் போட்டுக் கற்றவன் நான் (1-பக். 5) அந்த ஆனைமுகத்தானைச் சுற்றிவந்து வழிபட்டதால் தமக்கு இயல்பாக உள்ள பூனை பலம் ஆனை பலமாக வளர்ந்ததாகச் சாற்றுகின்றார். எதுகை பலம்; மேனை பலம்; இவையெல்லாம் எனக்குபூனை பலம்! செழும் பயிருக்கு எங்ஙனம் சோனை பலம்? அங்ங்ணம் என்பாட்டுக்கு அவன்தான் ஆனைபலம்! (1-பக். 6) இங்கு யானை பலம், பூனை பலம், சோனை பலம், ஆனை பலம் என்ற நான்கு சொற்றொடர்களும் சதுரங்கம் ஆடி சதுரங்கத்தால் சந்தி சிரிக்கும் கதைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. பிள்ளையார் சுழியைப் பிள்ளையாரே போட்டு எழுதிய ஒரே கதை இந்தக் கதைதான்! (1-பக். 157) என்ற அடிகள் நம் நாவில் தாண்டவம் ஆடும்போது மயிர் சிலிர்க்க வைக்கின்றன. ஏட்டில் பிள்ளையார் சுழியைக் காணும்போதெல்லாம் பாரதக் கதையை நம் மனத் திரையில் இரத்தினச் சுருக்கமாகக் காட்டுகின்றது! கவிஞர் தன் அடக்கமாகக் கூறும் அடியிற் கண்ட சொல் வீச்சுகள்: கி