பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

↔ சொல்லாட்சிச் சிறப்பு & 259 நாய்க்குடை, நிலத்தைப் பேர்க்கும் ஈட்டி-ஒலை ஈர்க்குஎன்ற சொல்இணைகள் கவிஞரின் கற்பனைத் திறத்தை, அடக்கத்தின் சிறப்பை அற்புதமாகப் புலப்படுத்துகின்றன. புதுக் கவிதைக்கும் ஒருவித புனிதத் தன்மையையும் நல்குகின்றன. இதில் அமைந்துள்ள சொல்லாட்சியும் அற்புதம். கங்கை எட்டாம் குழந்தையை வெள்ளத்தில் வீசப்போன நிலையில் வேந்தன் சந்தனு ஈரமில்லா ஈரமங்கையை நோக்கிப் பேசிய நிலையை விவரிக்கும் வாலியார்: வாழையடி வாழையென வந்துதித்த வாரிசுகள் ஏழை இழந்த ஏழை ஏந்திழையை வெறுத்தான்; அவள் துட்டை எனத் தெரிந்து-இந்த எட்டை இழக்குமுன்-தன்னை இதுகாறும் பிணைத்திருந்த கட்டை இறுத்தான் (1-பக். 14) இதில் சிறப்பு ழகர ஆட்சி அதிகமிருப்பதால் தமிழ் தேனாக இனிக்கின்றது. ஏழை-ஏழைகள்-ஏந்திழை', துட்டை-எட்டை-கட்டை என்ற மூவிணைப்புகள் பொருள்நயந் தோன்ற நம் சிந்தனையில் குமிழியிடும் போது அங்கு மகிழ்ச்சித் துளிகளும் கொப்புளிக்கின்றன! சந்தனு தன்னைப் புல்ல வந்தவள், பிள்ளை பெற்றுக் கொல்ல வந்தவள் என்று வசவுமாரிகளை முற்றுப்புள்ளி யில்லாமல் பேசி ஏசும் நிலையில், வாலியார் விவரிப்பது: வானதி சிரித்தாள்! தன் வழக்கை விரித்தாள்! ‘ஒப்பரிய வேந்தே! ஒப்பம் வைத்து நீ