பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 261 அவன்மூக்கு நுனியை முதலில் அதுமுத்தமிட்டது; பின்பு மூக்குக்குள்ளேயேமுகாம் இட்டது! வாசத்தையே-தனக்கு வழிகாட்டியாகஅழைத்துக் கொண்டுஅரசன் சென்றான்! வாடையில் வந்த-நறு வாடையை வீசியது-நூல் ஆடையில் நின்ற-பால் ஆடையென்று கண்டான்! நறுமணத்தைநுகாநத மணமமறுமணத்தை விரும்பியது; அதற்குமறுபடியும் வாலிபம் திரும்பியது! (1-பக். 31-32) இப்பகுதியில் ஒரு மணம் கங்கைக் கரையில் நடைபெற்றதைச் சுட்டுகின்றது; மறுமணம் யமுனைக் கரையில் நடைபெறுவதைக் காட்டுகிறது. சொல்லுமுறை நம்மை வசீகரிக்கின்றது. மேலும் 'வாடை-வாடையில்வாடை என்ற ஒரே சொல்லின் நளின நடைப் போக்கு நம் கவனத்தைக் கவர்கின்றது. வாடை மூக்கு நுனியை முத்தமிடல்-மூக்குக்குள்ளேயே முகாமிடல் என்ற தொடர் நம் மூக்கு நுனியை வேர்க்க வைக்கின்றது. வாடை-நூல்