பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 265 மேல் சொல்லணா அன்பை மருகன் சொரிவான்! (1-பக். 165-165) அற்புதமான சொற்கள் அமைந்தது இப்பகுதி. கம்பன், வில்லி, பாரதி போன்ற கவிஞர்கள் தீய கதைமாந்தர்களைக் கூறும்போது அவர்களையும் மீறி கடுமையான சொற்கள்.அவர்கள் நாக்கிலிருந்து உதிரும். கவிஞர் வாலியும் இதற்கு விலக்கல்லர். கடுஞ்சொற்களே அவனைச் சாடுகின்றன. பெண் ணாவி-அண்ணாவி’, ‘அப் பாவி-அப்பாவி-விட் டாவி- காட்டாவி', 'சொறிவான்-சொரிவான்' என்ற சொல்லிணைகள் உணர்த்தும் பொருள் நயங்கள் பல்சுவை கொண்ட மிளகு மிட்டாய்களை ஒருங்கே வாயும் நாக்கும் அநுபவித்து மகிழ்வனபோல் நமது மனம் அநுபவித்து மகிழ்கின்றது. விடங்கலந்த உணவை உண்ட பீமன் நாகலோகத் திற்குப் போகின்றான்; ஆயிரம் ஆணை பலம் தரும் இரசங் களைப் பருகி உறங்கிவிடுகின்றான். வாலியார் கூறுவார்: (அ) எட்டு நாட்கள்இமைகளைத் திறவாமல்இருந்தான் பிள்ளை; எட்டு நாட்கள்இமைகளை மூடாமல்இருந்தாள் அன்னை: (1-பக். 178) வீமனைக் காணாமல் நால்வரும் கவலைப் பட்டனர். குந்தி குமுறுகின்றாள். பெற்ற வயிறு அல்லவா? விதுரனின் ஆறுதல் மொழியைக் கேட்டு குந்தி தேவி குழப்பம் நீங்கினாள். கவிஞர் வாலி இந்நிலையைக் கூறுவது: