பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 275 தீரனுக்கு தொண்டையில் கூடஇருக்கக் கூடாது கோழை; இருந்தால் அவன் கோழை. 蓝一 ஏழையானதில் எனக்கு வருத்தமில்லை; கோழையானதுதான்-நம் குலத்திற்குப் பொருத்தமில்லை! (11-பக். 162) இதில் அன்புள்ள அண்ணனை வீமன் தன் சொற் களால் மெதுவாகவே அடிப்பதைக் காண்கின்றோம். 'தடியாலடிக்காமல் தருமத்தால் அடித்தல் வீமனுக்குப் பிடிக்காத செயல். கோழை-கோழை', 'ஏழை-கோழை. என்ற இணைகளில் உள்ள சிறப்பு ழகர ஆட்சி வீமனின் சொல்லடியை மென்மையாக்கி விடுகின்றது. சொற் பொருள் நம் உள்ளத்தைக் கவர்கின்றது. ஒம வயலில் பூத்த பஞ்சாலி தான் பெண்ணாய் பிறந்ததே பூமிக்குப் பாரம் என்று சொல்லி கண்ணிர்ப் பெருகிய நிலையில் இருந்ததைக் கண்ட கண்ணபெருமான் தேற்றிய நிலை: உத்தமியே! உன்னைத் துன்புறுத்திய... மூர்க்கர் வாழ்வை-காலம் முடித்து வைக்கும்; முடியா உன் மழைக் கூந்தலையும்-அதுவே முடித்து வைக்கும்! கண்ணில்-உன்னைக் குளிப்பாட்டியோர் புண்ணில் மிதப்பர் புணைகளாக, அந்தக்