பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சொல்லாட்சிச் சிறப்பு : 285 அதோ! அந்த நதியில்களைப்புத் தீரக் குளியுங்கள்; பிறகு வந்துகலைவினை உண்டு களியுங்கள்! (1-பக். 264) 'கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் முற்பகுதி இதில் அமைந்து சந்தர்ப்பத்தையொட்டி நிகழ்ச்சியை விளக்குகின்றது. நரியின் தந்திரத்தையும் விளங்கச் செய்கின்றது. இதே நரிக் கதையில் நரி கீரியை நோக்கிப் பேசும் பேச்சிலும் இன்னொரு பழமொழியின் சாயல் தலை காட்டுகின்றது. பேசும் பேச்சு இது: 'உனக்குபலமிருந்தால்-என்னோடு போரிடு; இல்லையேல்'பிழைத்தது புண்ணியம்’ என்று போய்விடு!” நரியை கையெடுத்துக் கும்பிட்டதுகீரி, நாலு வார்த்தைகீழ்க்கண்டவாறுகூறி! (1-பக். 266-67) 'பிழைத்தது புண்ணியம் என்பது தப்பித்தது தம்பிரா புண்ணியம் என்ற பழமொழியின் பிரதிபலிப்பு என்பதாக கொள்வதில் தவறு இல்லை! என்று கூறுகின்றது. அரக்கு மாளிகையில் பாண்டவர் இருந்தபோது அம்மாளிகை பற்றி ஐவருக்கும் ஐயம் எழுகின்றது. தருமன்