பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பாம்பென்றால் படைநடுங்கும்; படைஞர் தம் துடை நடுங்கும்; இந்தப் பழமொழியை-இன்றொருவன் பொய்யாக்கியிருக்கிறான்; ஒரு நடுக்கமோ நலிவோ இன்றி நம்மில் சிலரை நொறுக்கி நொய்யாக்கியிருக்கிறான்! (I-174) என்று கூறுபவன், வீமன். நிலத்தில் காட்டும் பலத்தை சலத்தில் காட்டுகிறானே என்று மெச்சி வியக்கின்றான். இதில் 'பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி பளிச்சிடுவதைக் காணலாம். இதனை ஒரு பாம்பையே வாலியார் பேச வைப்பது அற்புதம்! இது கதைக்கு மெருகூட்டுவதைக் கண்டு மகிழலாம். நரிக் கதையில் இது ஒரு பகுதி. நரி ஒரு புலி, ஒர் எலி, ஒரு செந்நாய், ஒரு கீரிப்பிள்ளை இவர்களை நோக்கிப் பேசுவது. மான் கறியை முழுவதையும் நரி, தான் மட்டும் தின்ன நினைத்ததற்கு மேற்கொண்ட தந்திரம் இது. . 'நண்பர்களே! நீராடாமல் அருந்தக் கூடாது ஆகாரம்; இது அருந்தவத்தோர் கூறிய ஆசாரம்! 'கூழைக் குடித்தாலும் குளித்துக் குடி!' என்று மூத்தோர் உரைத்திட்ட மூதுரைப் படி...