பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 287 கண்ணன் கருத்திலும் அவன் திருத்தமுடியாதநிமிர்த்த முடியாத நாய்வால் போன்ற-சன்மம் என்பது பெறப்படுகின்றது. பகாசுரனைப் பற்றிக் கூறும் பகுதியில் வருவது; தான் ஒட்டிவந்த வண்டியில் இருக்கும் உணவு வகையறாக்களை உண்டு முடித்து விட நினைக்கின்றான் வீமன். ஒவ்வொரு கவளமாய்-வாய் உள்ளே நுழைத்தான்; பகாசுரனை-இடைஇடையே பேர் சொல்லி அழைத்தான்! புகை நெருப்பாய்-வெளிப் போந்தான் குகை நெருப்பாய் குடியிருக்கும் பகாசுரன்; நண்டு கொழுத்தால்-வளையை நீங்குமெனும் பழமொழிப்படி உண்டு கொழுத்து-ஊர், நடுங்க உலவுகின்ற மகோதரன் ! (1-பக். 319) உண்டு கொழுத்தவன் பகாசுரன். தன் உணவை ஒரு தடியன் தின்பது கண்டு சினத்துடன் ஓடி வருகின்றான். சந்தர்ப்பத்துக்கேற்றவாறு பழமொழி அமைந்து படிப் போருக்கு மகிழ்ச்சியூட்டுகின்றது. சினங்கொண்ட பகாசுரன் பீமன் முதுகில் குத்தினான். பீமன் அதனைப் பொருட்படுத்தவில்லை. பிடர்பிடித்திழுத்து பூமியில் புரட்டினான்; அவனைப் பிட்டுப் பிட்டுப் பிட்டு பிட்டுபோல் புசித்திடப் போவதாய் மிரட்டினான்!