பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'அடடா! அற்புதன்! என்றது; அந்த வியாழன் நிகர்த்த-துர் வாசன் அருளல்-சொக்க வெள்ளி நிகர்த்த-ஒரு வெளிச்சம் பளிச் சென சனித்து நின்றது; ஒப்பின்றி தனித்து நின்றது! (1-பக். 90) இப்பகுதியில் ஞாயிறு முதல் சனி முடிய ஏழு வார நாட்களும் அமைந்துள்ள அற்புதத்தைக் காணலாம். வாலியாரின் தன்னிகரற்ற கவித்துவத் திறமையையும் மெச்சிப் பாராட்டலாம். (2) நிலாச்சாப்பாடு முடிந்ததும் பீமன் காணப்பட வில்லை. சகோதரர்கள் பதறுகின்றனர். குந்தி குமுறுகின் றாள். பெற்ற வயிறு பற்றி எரிகின்றது. இந்நிலையில் அவள் எண்ணமாக வாலியாரின் வாக்கு: என்பெறற்கரிய பேற்றை: பெருவீரம்பொங்குகின்ற ஊற்றை, பேசற்கரியபேராண்மையின் ஈற்றை, பொன்மடியில்பூத்தெழுந்த நாற்றை: புகழ் வெளிச்சம்பாய்ச்சும் ஒளிக் கீற்றை: பீமன் என்னும்புண்ணியப் பூங்காற்றை... ( - பக். 183) அடுக்கடுக்காக அமைந்த உருவகங்கள் சொல்நயம்பொருள் நயத்தைப் பொலிவுறச் செய்கின்றன.