பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு & 299 அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகத்தில் பல இடங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானம் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணுமாகிப் பிரளயத்துக் கப்பாலோர் அண்டமாகி எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே (6. 94; 2) இஃது அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகப் பாடல் பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னையென் பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாம் தவிரப் பணிப்பானை, இன்னதன்னயன் என்றறி யொண்ணா எம்மானை எளிவந்த பிரானை, அன்னம் வைகும் வயற்பழனத்து அணியார் ஊரானை மறக்கலு. மாமே. (7.591) இது தம்பிரான் தோழரின் சுந்தரக் கவிதை. இத்தகைய அருளிச் செயலின் சாயலில் கவிஞர் வாலியின் பாண்டவர் பூமியில் சில இடங்கள் அமைந்து காவியத்திற்குப் பொலிவினையும் சிறப்பினையும் நல்குகின்றன. சில இடங்களைக் காட்டுவேன். () துருவாசமுனிவர் அருளிய மந்திரத்தைச் சோதித்து அறிய ஆதித்தனைச் சிந்தையில் வைத்து ஒத, அவன் பிரசன்னமானான்: ஞாயிறு வனப்பை தரையில் பூத்த திங்கள் கண்டது; அதன்- 强 செவ்வாய் வியந்து