பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தளமைத் தளபதியைத் தேர்ந்தெடுக்கும் கட்டம். சாது தருமன் சகோதரரோடு விவாதிக்கச் சபையைக் கூட்டிப் பேசும்போது வருவது: முடிந்து மட்டும்முயற்சித்தேன்ரத்த வேள்வியைரத்து செய்ய, சிறியன் துரியன்சீண்டிவிட்டான் நம்மை; சாபங்கள் கொண்டு-சமரில் சித்து செய்ய! 'விழாதே! விழாதே! என்றுவிளக்கே வேண்டியும்'விழுவேன்! விழுவேன்! என்று விழுகிறது விட்டில்; என்ன செய்வது? அப்படிஎழுதி வைத்திருக்கிறதுவிகிவிட்டிலின் பொட்டில்! (I-பக். 357) ‘விளக்கில் விட்டில் விழுவது என்ற பழமொழியைப் பாமரர்களும் அறிவார்கள். துரியோதனன் விட்டில் போல் போரில் விழுகின்றான் என்று தருமன் விளக்குகின்றான். இங்ங்னமாக மக்கள் வாக்கில் நிரந்தரமாய் வாழும் பழமொழிகளைக் காவியத்தில் இடம்பெறச் செய்து 'பாண்டவர் பூமி’ எனும் புதுக்கவிதைக் காவியத்திற்கு புத்துணர்வு ஊட்டிப் பொலியச் செய்துள்ளார் வாலியார் என்ற புதுக்கவிதை நாயகர்; புதுக்கவிதை யாப்பதற்கே பிறப்பெடுத்த புனிதர். 3. சொல்-பொருள் நயப் பகுதிகள் இறைவனையோ பெரியோர்களையோ குறிப்பிடு மிடத்து அருளாசிரியர்கள் அருள் மொழிகளில் சொற்களை அடுக்கி அடுக்கி வந்து அழகு கொழிப்பதைக் காணலாம்.