பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 297 கவறாடக் கூப்பிட்டால்"கூடாது! பிசகு! என்று கூறியிருக்கலாமே-எங்கள் குலப்பெருமை பிழைக்க! இஷ்டப்பட்டுதானே ஆடினான்! இஷ்டமில்லாமலா கூடினான்! ஆடுவது தவறு! என அறியாதாஆடினான் கவறு? தருமன் தோற்காமல்-இந்தத் துரியன் தோற்றிருந்தால்.... தோற்றது தோற்றதுதான்! என்றுதுரத்தியிருப்பாய் என்னை தேவகி மைந்தனே! எனக்குத்தெரியாதா என்ன உன்னை? வேண்டியவர்க்கு ஒருநீதி: வேண்டாதவர்க்கு ஒருநீதி, நீஒரு கண்ணில் வெண்ணெய் வைத்துமறுகண்ணில் வைப்பாய் மண்ணை ! இதோ! இறுதியாகச் சொல்லுகிறேன். பங்காளிகளானபாண்டவர்க்கு ஊசிமுனை நிலம்கூடஉதவமாட்டேன்; ஈயிருக்கும் இடம்கூட Friulnri GLsir! செல்லுக சென்று சொல்லுக! (II — u&. 347) இந்தப் பகுதியில் பழமொழி அமைந்து கருத்தைத் தெளிவாக்குவதைக் கண்டு மகிழலாம்.