பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்தப் பழமொழி விதுரன் பேச்சிலும் வருகின்றது. தன் மகன் தாயத்தார் தேயத்தைச் சூதில் வெல்ல நினைக் கும் திட்டத்தை விதுரனிடம் சொல்லும்போது அவன் வெகுண்டு உரைத்த மறுமொழியில் வருகின்றது இது. ‘அரசே! இது அம்புலி குலத்தை அழிக்கக்கூடிய செயல்; ஒர் அய்யம் இல்லை; அத்தினபுரத்தில்- 梁 மையம் கொண்டுவிட்டது புயல்! தருமனின் தோல்விதருமத்தின் தோல்வி; பின் கவுரவர் கதி என்ன? விடைகாணமுடியாத கேள்வி? அரசு அன்று கொல்லும்; அறம் நின்று கொல்லும்; ஆனால் கொல்லும்; இதுஆன்றோர் வார்த்தை செல்லும்! (I-பக். 125) பெரும்பாலும் இப்பழமொழி பெரியவர்கள் பேச்சில்அறிஞர்களின் பேச்சில்-தான் அடிபடும்; கண்ணன் துது வந்தபோது கண்ணன் தேசத்தில் பாதியைத் திரும்பக் கொடுப்பது தான் நியாயம் என்று சொன்னபோது துரியோதனன் மறுத்துப் பேசின பேச்சில் ஒரு பழமொழி வந்து விழுகிறது. பழமொழி இது ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பது. துரியனின் பேச்சில் ஒரு பகுதி: 'கண்ணா! தருமன் கைக்குழந்தையா என்ன கிலுகிலுப்பையை ஆட்டிக் கிட்டத்தில் வரவழைக்க?