பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தற்புை-தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் பொற்பை; எம்மனை புகினும் செம்மனை எனும்படிஅம்மனை பொலியச் செய்யும்அம்மனை. (11-பக். 140) இவ்விடத்தில் இதே சந்தர்ப்பத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியையும் ஒப்பு நோக்கலாம். கண்டு மகிழலாம். தற்காலத்தில் எங்கும் புகழ்பெற்று நிற்கப் போகும் புதுக் கவிதையுடன் மோதுவதற்கென்றே பல்லாண்டுகட்கு முன்னே காத்து நிற்கும் மரபுக் கவிதையைக் கண்டு மகிழ்கின்றோம். கவிஞர் வைரமுத்து கூறுவதுபோல் மரபுக் கவிதையைப் புது மெருகுடனும் கற்பனையுடனும் க்ையாண்டால் மரபுக் கவிதையும் புதுப்பாணியுடன் பொலிவு பெறும் என்று கருதலாம். பாவியர் சபைதனிலே-புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை; ஆவியில் இனியவளை,-உயிர்த் தனி சுமந்துலவிடு செய்யமுதை, ஒவியம் நிகர்த்தவளை-அரு ளொளியினைக் கற்பனைக் குயிரதளைத் தேவியை, தவத்திருவை-எங்குத் தேடினும் கிடைப்பருந் திரவியத்தை, படிமிசை இசையுறவே-நடை பயின்றிடும் தெய்விக மலர்க்கொடியைக் கடிகமழ் மின்னுருவை,-ஒரு கமனியக் கனவினை காதலினை, வடிவுறு பேரழகை-இன்ப வளத்தினைச் சூதினில் பணயம் என்றே 6 பாஞ்சாலி சபதம் நான்காவது துகிலுரிதல் சருக்கம்-243, 244