பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 'அம்மா! உனக்குஅதிகம் பிடித்த சொல்லோ ? ്ilmു ചേജിലേஅடிக்கடி அவ்வாறு! அன்றெனைச் சேர்த்ததுஆறு என்கிறாய்; ஆத்திரப்படாதே ஆறு என்கிறாய்; அனைத்தும் விதி வகுத்தஆறு என்கிறாய்! (II — u$. 353) இதில் ஆறு என்ற சொல் பல பொருளில் ஒளிவிடுவதைக் கண்டு மகிழலாம். வாலியார் தம் புதுக்கவிதையில் பல இடங்களில் வழக்கமாக இலக்கிய வழக்குச் சொல்லையும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் அடிபடும் சொற்களையும் விரவுவதால் அவர் கவிதை புலவர்களையும் ஈர்க்கின்றது; புலவரல்லாத பொது மக்களையும் கவர்கிறது. 4. மரபுத்தொடர்கள் ஒரு மொழிக்கே உரிய சொற்றொடர்கள் மரபுத் தொடர்கள் எனப்படும். அவை இலக்கண வரம்புக்கு உட்படாதவை. ஒரு மரபுத் தொடரில் உள்ள ஒரு சொல்லை நீக்கி வேறொன்றை இட்டுக் கூறமுடியாது. ஒரு மொழியில் உள்ள மரபுச் சொல்லைச் சொல்லுக்குச் சொல் பொருள் கூறிப் பிறமொழியில் பெயர்த்து எழுதவும் இயலாது. ஒரு மரபுத் தொடரில் பொருளுக்கும் அதில் உள்ள தனித்தனிச் சொல்லின் பொருளுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக அவன் எரிந்து விழுகின்றான் என்பதற்குச் சினந்து பேசுகின்றான் என்பது பொருள்