பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு * 311 மரபுத் தொடரில் உருவக அணி பெரும்பாலும் காணப் பெறும். ஒரு மொழியிலுள்ள மரபுச் சொல்லின் கருத்தை அதனைத் தாய்மொழியாகக் கொண்டவரே எளிதில் நன்கு உணரமுடியும். நன்னூலார் மரபுச் சொல்லைக் குறித்து, எப்பொருள் எச்சொலின் எவ்வாறுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே. என்ற நூற்பாவும் செய்துள்ளார். எனவே, மொழியில் தொன்மையாக வழங்கி வரும் வழக்கினை அறிந்து அவ்வாறே வழங்குதல் தக்கது. தமிழ் மொழியில் உள்ள ஒரு சில மரபுத் தொடர்களைப் பொருளுடன் அறிதல் இன்றியமையாதது. அகடவிகடம்-தந்திரம்; அகலக் கால் வைத்தல்வரைகடந்து போதல்; அமளி பண்ணுதல்-சச்சரவு பண்ணுதல்; அவசரக் குடுக்கை-பதற்றக்காரன், அள்ளிக் கொட்டுதல்-மிகச் சம்பாதித்தல்; ஆறப் போடுதல்-காலந் தாழ்த்துதல்; இரண்டுங்கெட்டான்-நன்மை தீமையை அறியாதவன்; இழுக் கடித்தல்-அலைய வைத்தல்; ஈயோட்டுதல்-வேலை செய்யாமல் சும்மா இருத்தல்; தென்காசி வழக்கு-இரு திறத்தார் கருத்துக்கும் இடைப் பட்ட நிலையில் வழக்கைத் தீர்த்தல்-என்பன போன்றவை தமிழ்மொழியில் பேச்சுவழக்கில் ஏராளமாக உள்ளன. இத்தகைய மரபுத் தொடர்களை கவிஞர் வாலியார் தமது "பாண்டவர் பூமியில் ஆங்காங்கே கையாண்டி ருப்பது காவியத்திற்குத் துடிப்பூட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றைக் காண்போம். 1. கொம்பு சிவி விடுதல்: சண்டைக்குத் தயாராக்குதல் என்ற பொருளில் தோன்றிய மரபுத் தொடர். 7 நன்னூல் - நூற்பா 388