பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தொடர்ந்து-அவனைத் தொக்கென எண்ணிக் கரித்தான்! ‘கர்னா! உன் குலத்திற்கு ஏற்றது குதிரைச் சவுக்கு! - அதை எடு, அதை விடுத்து ஆலமரமாக ஆவதறகு ஆசைப்படலாமா சவுக்கு? (1-பக். 229) என்று பேசுகிறான். பேசுவதில் மரபுத் தொடரின் பொருள் மின்னொளி விடுவதைக் காணலாம். (15) கவுரவம் குடை சாய்ந்தது-மதிப்பு தரைமட்ட மாகியது என்ற பொருளில் வருவது. கல்வி முடிவில் குருதட்சினை கேட்டபோது வருவது. கெளரவர் முதலில் துருபதனை எதிர்த்துத் தோற்றனர். இதனைக் கவிஞர் வாலி, கவுரவர் கவுரவம் குடை சாய்ந்தது; * பாஞ்சாலர் முன்-அவர்கள் படை சாய்ந்தது! (I–Lö. 246) என்று கூறுவார். பாடல் பகுதியைப் படித்தால் மரபுத் தொடரின் பொருள் தெளிவாகத் தட்டுப்படும். (6) துடைதட்டுதல்-வீரம் பேசுதல்; கடைகட்டுதல்-தோற்று ஓடுதல் இவையிரண்டும் துருபதனிடம் துரியோதனன் நடத்திய போரைப் பற்றிக் கூறுகையில் வாலியாரின் வாக்காக வருவது துரியோதன்தான்-முதலில் துடுக்கு மிடுக்காய்